JUSTIN || ரெடியாகிறதா பாமக? பாஜகவின் முடிவு? ராமதாஸ் விளக்கம்

Update: 2024-05-13 07:41 GMT

தமிழக முதல்வர் ஸ்டாலின் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்காததால் இடஒதுக்கீடு தொடர்பாக விரைவில் போராட்டம் நடத்தப்படுமெனவும் இதற்கான தேதி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படுமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் சமூகநீதி பற்றி சில கட்சிகள் பேசினாலும் தொடர்ந்து சமூக நீதி குறித்து விடாமல் பேசி வருவது பாமக தான் என்றும் சமூக நீதி விவகாரத்தில் செய்த தவறுகளை திமுக திருத்தி அமைக்க வேண்டும் என கூறினார்.

நான்காவது கட்டமாக தேர்தல் ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநானயக கூட்டணி வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்பதை பாமக வலியுறுத்தி வருகிற நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும் அதனை மத்திய அரசு தான் செய்ய வேண்டுமென தமிழக அரசு தெரிவிப்பதாக குற்றஞ்சாட்டினார். ஜாதிவாரி கணக்கெடுப்பு பீகார் ஆந்திரா, கந்நாடகாவில் நடத்தப்பட்டு தெலுங்கானாவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் இடஒதுக்கீடு வழங்கி இருக்கலாம் ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் இடஒதுக்கீடு தமிழக அரசு வழங்கவில்லை என்றும் அன்புமணி ராமதாஸ் ஜிகே மணி இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி மனு அளித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காததால் இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் நடத்தப்படுமெனவும் இதற்கு தேதி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்