டீ குடிக்கிற கேப்பில்.. கைவரிசை காட்டிய திருடர்கள்.. நடந்தது என்ன? | Perambalur
பெரம்பலூரில் அரசு பேருந்து நடத்துனரிடம் 27 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிருந்து திருவண்ணாமலை நோக்கி செல்ல புறப்பட்ட அரசு பேருந்து பெரம்பலூரை வந்தடைந்த போது
நடத்துனரான கவுண்டப்பனும் ஓட்டுநரும் தேநீர் அருந்த இறங்கியதாக கூறப்படுகிறது..
தேநீர் அருந்திவிட்டு சிறிது நேரம் கழித்து பேருந்தில் ஏறி டிக்கெட் கொடுப்பதற்காக பையை பார்த்துள்ளார் கவுண்டப்பன்...அப்போது தான் 27 ஆயிரத்து 300 ரூபாய் பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது... புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்...