ஈரடுக்கு மேம்பாலத்திற்கு பிறந்தநாள்.. கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்
நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள இருப்பு பாதைக்கு மேல் செல்லும் ஆசியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலத்திற்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பாலத்தில் அமைந்துள்ள அடிக்கலில் நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார்.இதனை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்ததுடன் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்