"இதை செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை..?" திருச்சி சிவா MP | Tiruchi Siva
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்களின் நியமிக்கும் தேர்வு குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கொண்டிருப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்? என்ன பிரச்சனை? என்று, திமுக மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார். தலைமை தேர்தல் ஆணையர்கள் பணி நியமன திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அவர், பிரதமரும் மத்திய அமைச்சரும் மட்டுமே விரும்பும் ஒருவரை தேர்தல் ஆணையராக நியமிக்க வகை செய்யும் இந்த மசோதாவால் எந்த அர்த்தமும் இல்லை என்றார்.
இந்த மசோதாவை தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று திருச்சி சிவா வலியுறுத்தினார்