"அனைத்து கோயில் பிரசாதங்களுக்கும் கம்ப்யூட்டர் மூலம் பில்" - உயர்நீதிமன்றம் அதிரடி

Update: 2023-12-16 02:09 GMT

  பழனி முருகன் கோயிலில ் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்த‌த்திற்கு ரசீது வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பொதுநல மனுவில், பழனி கோயிலில் பணம் பெற்று பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்த பிரசாத‌த்திற்கு ரசீது தராத‌தால், அதிக விலைக்கும், அளவு குறைவாகவும் சிலர் விற்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பினால், வியாபாரிகள் வாக்குவாதம் செய்வதாக வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் சக்திவேல் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் வழங்கப்படும் பிரசாதங்களுக்கு கம்ப்யூட்டர் முறையில் பில் வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதே போன்று, பழனி முருகன் கோயிலிலும் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திற்கு ரசீது கொடுக்கப்படும் என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தொடர்ந்து முறையான பில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்