சுதந்திர தினத்தில் பாக். ராணுவ தளபதியின் வைரல் கருத்து

Update: 2024-08-15 09:08 GMT

பாகிஸ்தானின் சுதந்திர தினத்தையொட்டிபாகிஸ்தான் ராணுவ அகாடமியில் சுதந்திர தின பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ஆசிம் முனீர், ராணுவத்தை பலவீனப்படுத்துவது அரசை பலவீனப்படுத்துவதாகும் எனக் குறிப்பிட்டார்.

எந்தவொரு சக்தியாலும் நாட்டை சீரழிக்க முடியாது என்றும்,

டிஜிட்டல் பயங்கரவாதத்தை பயன்படுத்தி, அரசு நிறுவனங்களுக்கும் பாகிஸ்தான் மக்களுக்கும் இடையே பிளவை உருவாக்க நினைக்கும் வெளிநாட்டு சக்திகளின் முயற்சிகளுக்கு மத்தியில் தேசிய ஒற்றுமையை காப்பது முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்