வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை வாதங்களுக்காக, வழக்கின் விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வரும் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.