"சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும்" "இல்லையெனில் பற்றாக்குறை ஏற்படும்" - விவசாயிகள் வைத்த கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையை இந்த மாதமே இயக்க, கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும், ஆலையை நவம்பர் மாதத்திலேயே திறக்காமல், டிசம்பரில் திறந்தால், வெட்டுக்கூலி ஆட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், முதல்வர் அறிவித்த சிறப்பு ஊக்கத்தொகையை, பொங்கலுக்கு அன்றி தீபாவளிக்கே வழங்குமாறும் கோரிக்கை வைத்துள்ளனர்.