முதியவர்கள் இறந்தால் நடக்கும் அதிர்ச்சி - கலெக்டர் போட்ட உத்தரவு.. மாறிய காட்சி

Update: 2024-10-04 07:53 GMT

உதகை அருகே பல்வேறு முறைகேடு புகார்கள் தொடர்பாக

தனியார் காப்பகம் உதகை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. உதகை அருகே முள்ளிகொரை பகுதியில் நகர்புற வீடற்றோர் தங்கும் விடுதி கட்டிடத்தில் அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லம் என்ற தனியார் இல்லம் செயல்பட்டு வந்தது. அங்கு 87 முதியவர்களை தங்க வைத்து பராமரித்து வந்த நிலையில் காப்பக நிர்வாகி தஸ்தகீர் என்பவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன.

காப்பகத்தில் உள்ள முதியவர்கள் இறந்தால் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் உடலை புதைத்ததாகவும், எரித்ததாகவும் கூறப்படுகிறது. இறந்த ஒரு மூதாட்டியின் 71 சவரன் நகைகள் மற்றொரு முதியவரின் சொத்துக்கள்

அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு புகார் எழுந்தன.

இதையடுத்து உதகை கோட்டாட்சியர் , நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் காப்பகத்தில் விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காப்பகத்தை உதகை நகராட்சியிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் போலீசாருடன் காப்பகத்திற்கு சென்று அதன் நிர்வாகி தஸ்தகீரை வெளியேற்றி காப்பகத்தை உதகை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்