உதகையை உலுக்கிய பெண் கொலை -அதிரவைத்த பதிவு பாஜக நிர்வாகி அதிரடி கைது

Update: 2024-09-07 12:28 GMT

உதகையில் சயனைடு கலந்து கொலை செய்யப்பட்ட பெண்ணை பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பிய பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். காந்தல் பகுதியைச் சேர்ந்த ஆஷிகா பர்வீன் என்பவர், மாமியார் மற்றும் உறவினரால் காபியில் சயனைடு கலந்து கொல்லப்பட்டார். அவர் இந்து பெண் என்றும், லவ் ஜிகாத் மூலம் மதம் மாற்றி திருமணம் செய்து, வரதட்சணை கொடுமை செய்து, அவர் கொல்லப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து விசாரித்த சைபர் கிரைம் போலீசார், இந்த தகவலை பரப்பிய அருப்புக்கோட்டையைச் சார்ந்த பாஜக நிர்வாகி வெற்றிவேலை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது, வரும் 13-ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்