பலமுறை சொல்லியும் கேட்காத அதிகாரிகள்..கடைசியில் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்

Update: 2023-09-02 03:50 GMT

போச்சம்பள்ளி அடுத்த மருதேரி ஊராட்சி காவபட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைந்துள்ளது... இத்தொட்டியானது சிதிலமடைந்த நிலையில் கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக வேறு ஒரு பகுதியில் புதிதாக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. சேதமடைந்த தொட்டியை இடித்து அகற்றக் கோரி பலமுறை பொதுமக்கள் வலியுறுத்தியும் அகற்றப்படாத நிலையில், நீர் தேக்க தொட்டியில் இருந்து சிமென்ட் காரை இடிந்து அப்பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் மேல் விழுந்தது... இதில் மாணவிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது... மேலும் சில மாணவர்களும் அடிக்கடி இதுபோல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்... இனிவரும் காலங்களில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்