இரவு முழுவதும் கேட்கும் குரல்... பயந்து நடுங்கும் கரடிகள் - ஒர்க் அவுட் ஆன ஓனரின் புதிய யுக்தி
நீலகிரி மாவட்டம், குன்னூர் சாக்லேட் தொழிற்சாலைக்கு வரும் கரடியை விரட்ட, அதன் உரிமையாளர் புதிய யுக்தியை கையாண்டுள்ளார். இப்பகுதியில் இயங்கி வரும் சாக்லேட் தொழிற்சாலைக்கு, அடிக்கடி வரும் கரடிகள், அங்கிருந்த சாக்லேட்டுகளை சாப்பிட்டுள்ளன. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, மனிதர்கள் நடமாட்டம் இருப்பது போன்று ஒலியை பதிவு செய்து, அதனை இரவு முழுவதும் தொழிற்சாலையில் ஒலிக்கச் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, தொழிற்சாலையில் இரவு நேரத்திலும் மனிதர்கள் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதால், கரடி வருவதில்லை என தொழிற்சாலை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.