சிறை கைதிகளின் உடல்நலம் காக்க புது திட்டம் - பச்சைக்கொடி அசைத்த டிஐஜி பழனி
மதுரை மத்திய சிறையில், கைதிகளின் உடல்நலத்தை காக்க, நடைபயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை டிஐஜி பழனி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் சிறைவாசிகள் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு நடை பயிற்சி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், சிறைவாசிகளின் உடல் நலத்திற்காகவும், மனரீதியான ஒரு ஊக்கமளிக்கவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.