சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடு - வனத்துறை அறிவிப்பு

Update: 2023-08-18 04:14 GMT

விபத்து எதிரொலியாக, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வெள்ளி முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சுற்றுலா தலங்களுக்கு நுழையும் வாகனங்கள் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுப்புத்தகம், வாகன காப்பீட்டு சான்றிதழ்,வாகன மாசு சான்றிதழ் உள்ளட்டவைகள் வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இல்லையெனில் மோய‌ர் ச‌துக்க‌ம் நுழைவுவாயில் ப‌குதியிலேயே வாகனம் நிறுத்தப்பட்டு சுற்றுலா த‌ல‌ங்க‌ளுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோயர் பாயிண்ட் சுற்றுலா தலத்தில் வாகன நுழைவுக்கட்டணம் மற்றும் சுற்றுலாத்தலங்க‌ளுக்குள் சுற்றுலாப்பயணிகள் செல்ல நுழைவுக்கட்டணம் வசூல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் வரும் சுற்றுலா தல நுழைவுக்கட்டணம் அரசாணையின்படி வசூலிக்கப்படும் என்றும், மேலும் பேரிஜம் செல்ல ஒரு நாளைக்கு 50 வாகனங்களாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தலங்கள் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகளுக்காக அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் மூடப்படும் என‌ வனத்துறையின‌ர் அறிவித்துள்ள‌ன‌ர்.

Tags:    

மேலும் செய்திகள்