நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி
மலையில் உள்ள கரடி, யானை, சிறுத்தை உள்பட வன
விலங்குகள் அவ்வப்போது வெளியேறி, அடிவாரத்தில்
உள்ள மணிமுத்தாறு, பாபநாசம் பகுதி குடியிருப்புகளுக்குள்
புகுந்து விடுகின்றன. இந்நிலையில் நேற்றிரவு மணிமுத்தாறு
மலை அடிவார பகுதியில் சுற்றித்திரிந்த கரடி ஒன்று, இன்று
அதிகாலையில் மணிமுத்தாறு 9ஆம் அணி பட்டாலியன்
தளவாய் வீட்டின் அருகேயுள்ள மரத்தின் மீது ஏறி உள்ளது.
தொடர்ந்து மரத்திலேயே ஓய்வெடுத்து வரும் நிலையில்,
அம்பை வனத்துறையினர் முகாமிட்டு கரடியை கண்காணித்து வருகின்றனர்.