துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்களுடன் நெல்லையில் கண்ணபிரான் கைது

Update: 2024-10-17 02:29 GMT

தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த கண்ணபிரான் தேவேந்திரகுல எழுச்சி இயக்க தலைவராக உள்ளார். அவர் மீது 5-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள், 15-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வாகன சோதனையின் போது கண்ணபிரான் தனது ஆதரவாளர்களோடு சென்ற கார்களை தாழையூத்து டி.எஸ்.பி. ரகுபதி ராஜா தலைமையிலான போலீசார் சோதனையிட்டனர். அதிலிருந்து ஒரு கை துப்பாக்கி, 5 அரிவாள்கள் 4 நாடு வெடிகுண்டுகளை பார்த்து அதிர்ந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கண்ணபிரான் உள்பட 15 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் தற்காப்புக்காக ஆயுதம் வைத்திருந்தார்களா? அல்லது கொலை செய்யும் நோக்கில் ஆயுதங்களை வைத்திருந்தார்களா என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. வாகன சோதனையில் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்கள் சிக்கிய விவகாரம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்