நெல்லையில் புகழ்பெற்ற கோயிலில் பற்றி எரிந்த சாமி சிலை...பக்தர்கள் அதிர்ச்சி...பகீர் காட்சிகள்

Update: 2024-10-07 09:39 GMT

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருமலை நம்பி கோயிலின் அடிவாரத்தில், நம்பியாற்றின் கரையோரம் சங்கிலி பூதத்தார் சன்னதி அமைந்துள்ளது. இங்கு ஐம்பொன்னால் ஆன சிலை உள்ளது. இந்நிலையில், சுவாமிக்கு வஸ்திரம், மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் முடிவடைந்து, மாலையில் பக்தர்கள் வெளியேறினர். காலையில் கோயில் பூசாரி சென்று பார்த்தபோது, சுவாமி வஸ்திரங்கள் மற்றும் பூமாலைகள் தீப்பிடித்து எரிந்து ஐம்பொன் சிலையும் தீக்கரையாகியிருந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில், மாலை 6 மணிக்கு மேல் யாரும் தங்குவதற்கு அனுமதி கிடையாது. இதனால் இரவில் மர்ம நபர்கள் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தார்களா? என விசாரணை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்