லிப்ட் கேட்டு சென்ற இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்...நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-09-28 10:47 GMT

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

நெல்லை மாவட்டம் உவரி நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெஹிந்தன். மீன்பிடி தொழில் செய்துவரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பாக திசையன்விளை பகுதியில் கபடி விழாவில் கலந்து கொண்டு. இரவு 11 மணி அளவில், அப்பகுதியில் வந்த இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். கூடவே மற்றொரு இரு சக்கர வாகனமும் வந்துள்ளது. இரு சக்கர வாகனம் பாதை மாறிச் செல்வதை அறிந்த ஜெஹிந்தன், வாகனத்தில் இருந்து தப்ப முயற்சித்துள்ளார். வாகனத்தை நிறுத்திய மர்ம நபர்கள், உடனடியாக அவரிடம் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி, 2 பவுன் மோதிரங்கள், ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை பிடுங்கிவிட்டு, அவரை தலையில் அடித்து மயக்கமடைய வைத்து, அந்த இடத்திலேயே விட்டு சென்றனர். காலையில் மயக்கம் தெளிந்த ஜெஹிந்தனை, மனைவியும், மைத்துனரும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை தேடி வந்த போலீசார், அஸ்வின் ராஜேஷ், அரவிந்த் குமார், சதீஷ், தச்சமொழி ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது உறுதியான நிலையில், நால்வரையும் சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்