100 நாட்களில் சாதித்து காட்டிய நெல்லை ரயில்வே ஸ்டேஷன் | Nellai | Railway Station

Update: 2024-09-03 10:13 GMT

ஏப்ரல் ஒன்று முதல் ஜூலை 10 வரை நெல்லை, தென்காசி வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்கள் ஈட்டிய வருவாய் பற்றிய விபரம் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்டுள்ளது. நெல்லை ரயில் நிலையம் 44 கோடியே 37 லட்சத்து 30 ஆயிரத்து 531 ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகவும், 36 லட்சத்து 53 ஆயிரத்து 430 பேர் பயணித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. தென்காசி ரயில் நிலையம் 6 கோடியே 55 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. நெல்லை தென்காசி வழித்தடத்தில் உள்ள 16 ரயில் நிலையங்களில் மொத்தமாக 53 கோடியே 50 லட்சத்து 4 ஆயிரத்து 75 ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்