வேலை முடிந்து வீடு திரும்பிய மகனை தாயின் கண்முன்னே துடிதுடிக்க வெட்டி கொன்ற கும்பல் - பயங்கரம்
தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கி முத்து, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தாயுடன் வசித்து வந்தார். தாயுடன் சேர்ந்து கட்டட வேலைக்குச் சென்று வந்த நிலையில், வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில், சாந்தி நகர் மணிக்கூண்டு அருகே 3 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்று விட்டது. அவர் மீது சில வழக்குகள் இருப்பதால் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா அல்லது குடும்ப பிரச்சனையால் கொல்லப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.