"பேராயர் தன்னிச்சையாக செயல்படக்கூடாது" - மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருமண்டலத்துக்குட்பட்ட கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதில், பேராயர் தன்னிச்சையாக செயல்படக்கூடாது என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. திருமண்டல பேராயர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், பேராயர் தன்னிச்சையாக செயல்பட தடை விதிக்க வேண்டும் எனவும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன் விசாரணையின் போது, சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு அரசு தரப்பில் சில உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன எனவும், அதை தவறாக பயன்படுத்தக்கூடாது எனவும் கூறிய நீதிபதி பணியிடங்களை நிரப்புவதில் பேராயர் தனிச்சையாக செயல்படக் கூடாது என உத்தரவிட்டார்.