மீண்டும் சோசியல் மீடியாக்களில் நீட் வினாத்தாள் லீக்..? - PG மாணவர்கள் அதிர்ச்சி

Update: 2024-08-08 09:08 GMT

முதுகலை நீட் தேர்வு வினாத்தாள், சமூக வலைதளங்களில் கசிந்ததாக வெளியான தகவல் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் 5ம் தேதி நடைபெற்ற நீட் இளங்கலை போட்டித் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் முன்கூட்டியே வெளியான விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து, 20க்கும் அதிகமானோரை கைது செய்துள்ளது. இதனிடையே, முதுகலை நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு, வரும் 11-ம் தேதி நடைபெறுகிறது. எம்.பி.பி.எஸ் முடித்த 2 லட்சம் மருத்துவர்கள், முதுகலை நீட் தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தில் 30 ஆயிரம் மருத்துவர்கள் இத்தேர்வை எழுத இருக்கின்றனர். தேர்வு நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் முதுகலை நீட் தேர்வு கேள்வித்தாள் தயாராக உள்ளதாகவும், பணம் செலுத்தி பெறலாம் என்றும், தொலைபேசி எண்களுடன் வெளியான தகவலால் மருத்துவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்