நீட் தேர்வு - "அநீதிக்கும், பாரபட்சத்திற்கும் பதில் சொல்ல வேண்டும்" - கொந்தளித்த அமைச்சர் உதயநிதி
நீட் தேர்வு - "அநீதிக்கும், பாரபட்சத்திற்கும் பதில் சொல்ல வேண்டும்" - கொந்தளித்த அமைச்சர் உதயநிதி
முதுகலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு பூஜ்ஜியம் மதிப்பெண் என மதிப்பெண் நிர்ணயித்திருப்பது கல்வித் தரத்தை பாதிக்கும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் முதுகலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு 2 சுற்று கலந்தாய்வு முடிந்த பிறகும், சுமார் 13,200 இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில், தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை குழு, மூன்றாம் சுற்று கலந்தாய்வில் சேருவதற்கு முதுகலை நீட் தேர்வில் பூஜ்யம் பர்சன்டைஸ் மதிப்பெண் பெற்றிருந்தாலும் போதும் என்று அறிவித்துள்ளது . அதாவது, கட் ஆப் மதிப்பெண் குறைவாக இருந்தாலும், முதுகலை மருத்துவ படிப்பில் சேரலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சேர்பவர்கள், தரமானவர்களாக இருப்பார்கள் என கூறப்பட்டு வரும் நிலையில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு முதுகலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது, கல்வி தரத்தை பாதிக்கும் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். நீட் தேர்வு மூலம், தரமான கல்வி என மத்திய அரசு கூறி வருவதில் இருந்து விலகுவதாக உள்ளது என்று கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறியுள்ளார்.