நீட் தேர்வை வைத்து முதலமைச்சர் அரசியல் செய்ய வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பின், அங்குள்ள தனியார் மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் கூட நீட் தேர்வில்
தேர்ச்சி அடைந்து, மருத்துவ படிப்பில் சேர்ந்து வருவதாக கூறினார். நீட் தோல்வியால் மாணவர் மரணம் அடைந்தது துரதிர்ஷ்டவசமானது என்றும், இதனை வைத்து சிலர் அரசியல் செய்வதாகவும் தெரிவித்தார்...