மசூதி அருகே... 1000கி இரும்புப்பெட்டி - உள்ளே இருந்தது என்ன..? கெட்டது குடியாத்தின் தூக்கம்
குடியாத்தம் அருகே பழைய இரும்பு பெட்டியில் புதையல் இருப்பதாக வதந்தி பரவிய நிலையில், அதில் பழைய நாளிதழ் மற்றும் சில நாணயங்கள் மட்டுமெ இருந்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம், சந்தைபேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது இர்தீரிஸ் என்பவர் ஜோதிமடம் பகுதியில் உள்ள மசூதிக்கு சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்ட இரும்பு பெட்டிய கடந்த மாதம் வழங்கினார். இந்நிலையில், அப்பெட்டியில் புதையல் இருப்பதாக வதந்தி பரவியது. இதனால், பெட்டியை உடைத்து பார்க்க முயற்சி செய்யப்பட்டது. அப்போது பெட்டியை உடைக்க முடியாததால், அதனை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்நிலையில், இன்றைய தினம் அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி உடைக்கப்பட்ட போது, அதில் பழைய நாளிதழ் மற்றும் நாணயங்கள் மட்டுமே இருந்தன.