நாங்குநேரி சம்பவம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் அனுப்பிய அறிக்கையை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே பள்ளிகளில் சாதிய கொடுமைகளை ஒழிப்பது தொடர்பாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை குழுவை அமைப்பதற்கு ஏதுவாக, பள்ளி கல்வித்துறை, தனது பரிந்துரை அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளது. ஒரு சில தினங்களில் அரசாணை வெளியாகும் என்றும், அதன் பின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு விசாரணையை துவங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.