நிதி நிறுவன மோசடி வழக்கில் சிறையில் உள்ளவர் மீது நாமக்கல்லில் 30 கோடி ரூபாய் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் கடையூரை சேர்ந்த தீபக் திலக் நிதி நிறுவனம் தொடங்கி, முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை நம்பி நாமக்கல்லில் ஏராளமானோர் முதலீடு செய்த நிலையில், பணத்தை தராமல் 2 ஆண்டுகளாக தலைமறைவானதாக நாமக்கல் எஸ்.பி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.