நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை அடுத்த பெரியமருதூர் அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகன் சுதர்சனம். அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் லோகேஷ் ஆகிய இருவரும் கபிலர்மலை - பரமத்தி சாலையில் இரவு 11 மணி அளவில் ஆம்னி வேன் ஓட்டி பழகியுள்ளனர். அப்போது ஈரோடு நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, ஆம்னி வேன் மீது மோதி விபத்துக்குள்ளனது. ஆம்னி வேன் முற்றிலுமாக நொருங்கிய நிலையில், சிறுவர்கள் சுதர்சனம், லோகேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுவர்களின் உடலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.