தடையை மீறி சுருக்குமடி வலைகளை பயன்படுத்தும் மீனவர்களை கண்டித்து, நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்
சுருக்குமடி வலைகளை கொண்டு கடலில் மீன் பிடிப்பதால், சிறு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து, கடந்த ஆண்டு நாகையில் நடைபெற்ற மீனவர்கள் கூட்டத்தில், காரைக்கால் மயிலாடுதுறை நாகை ஆகிய மூன்று மாவட்ட மீனவர்களும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்த போவதில்லை என ஏக மனதாக முடிவெடுத்தனர். இந்நிலையில் இந்த முடிவுக்கு எதிராக, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடந்த 5, தினங்களாக சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று நாகை மீன்பிடி துறைமுகத்தில் நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது,
தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தும், மயிலாடுதுறை மீனவர்களை கண்டித்து, நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள், இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.