மகள் இறந்த 6 நாட்களில் தாய் எடுத்த விபரீத முடிவு.. நாகையை அதிரவிட்ட சம்பவம்

Update: 2024-06-15 07:55 GMT

நாகையில் மகள் இறந்த துக்கத்தில் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல்லை அடுத்த கீழக்கரையிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி ராதிகா, மகள் திவ்யா. திவ்யா 12 ம் வகுப்பு முடித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 9 ம் தேதி திவ்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மகள் திவ்யா இறந்த வேதனையில் இருந்து வந்த ராதிகா நேற்று தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனை சற்று எதிர்பாராத கார்த்திகேயன் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்து ராதிகாவை மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்தவர்கள் அவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகள் இறந்த 6 நாளில் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்