யூடியூப்பில் விளம்பரம் பார்த்தால் பணம் தருவதாக கூறி கோவையில் உள்ள தனியார் யூடியூப் நிதி நிறுவனம் ஒன்று மோசடி செய்ததாக போலீசார் வழக்குபதிவு செய்திருந்தனர். இந்நிலையில், கோவை, நீலம்பூர் பாலக்காடு சாலையில் கூடிய நிறுவனத்தின் சந்தாதாரர்கள், நிறுவனத்தின் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் வழக்கை ரத்து செய்யும் படியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகாரளித்திருப்பதாகவும், புகாரில் சட்டவிரோதமாக கூட்டம் கூடியது, பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தது மற்றும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டிருப்பதாகவும் கூறப்படும் நிலையில், நிறுவனத்தின் உரிமையாளர் சச்சிதானந்தம் மற்றும் சந்தாரர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.