வீட்டிற்குள் கழுத்தறுக்கப்பட்டு கொலை.. துடிதுடிக்க இறந்து கிடந்த தம்பதி - விழுப்புரத்தில் பரபரப்பு

Update: 2023-10-22 03:42 GMT

விழுப்புரம் அருகே வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை, மர்மகும்பல் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வளவனுரை சேர்ந்த தம்பதி ராஜன்-உமாதேவி. இருவரும் அரசு பள்ளியில் தலைமை

ஆசிரியர்களாக பணியாற்றி ஒய்வு பெற்றவர்கள். இவர்களுடைய மகன் மற்றும் மகள் இருவரும் திருமணமாகி பெங்களூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள நிலையில், மகள் பத்மா கடந்த 19ம் தேதி போன் செய்த போது, ராஜன் எடுக்காததால் சந்தேகமடைந்து இருக்கிறார். அருகில் உள்ள உறவினர்களுக்கு போன் செய்து தனது பெற்றோர்களை நேரில் சென்று பார்க்குமாறு தெரிவித்த நிலையில், தம்பதி இருவரும் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்