ரூ.50 ஆயிரத்துக்கு வாங்கி வீட்டில் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த கணவன், மனைவி கைது

Update: 2024-08-19 10:43 GMT

வன உயிரினமான குரங்கு குட்டியை வீட்டில் வைத்து வளர்த்து வந்த தம்பதி கோவையில் கைது செய்யப்பட்டனர்... ஈரோட்டைச் சேர்ந்த பெருமாள் - சகுந்தலா தம்பதி பிறந்து 2 முதல் 3 மாதங்களேயான குரங்குக் குட்டியுடன் கோவை காட்டூர் பகுதியில் நடனமாடிக் கொண்டிருந்ததைக் கண்ட விலங்கு வதை தடுப்பு அமைப்பின் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் காவல் நிலையம் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் அத்தம்பதி தேனியைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து 50 ஆயிரம் பணம் கொடுத்து குரங்குக் குட்டியை வாங்கி வந்தது தெரிய வந்தது... இருவரையும் கைது செய்த வனத்துறையினர் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட குரங்கு குட்டி விலங்குகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்