"அத்தனையும் பொய்யா? அரசின் தோல்வியா?" - மத்திய அரசை சுட்டிய விரல்

Update: 2024-07-29 07:47 GMT

பணமதிப்பிழப்பு பாஜக அரசின் திட்டமிட்ட பொய்யா, அல்லது அரசின் தோல்வியா என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மத்திய அரசு பொறுப்பை பாஜக ஏற்று 49 நாட்களில் 14 தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று, 15 வீரர்கள், 10 பொதுமக்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனாவை விரட்ட பாத்திரங்களை தட்டியது போல, பணமதிப்பிழப்பு தீவிரவாதத்தை ஒழித்துவிடும் என்று கூறி மக்களின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி தகர்த்த‌தாக கூற்றம் சாட்டியதோடு, பணமதிப்பிழப்பு பாஜக அரசின் திட்டமிட்ட பொய்யா, அல்லது அரசின் தோல்வியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்