கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலையில் அமைக்கப்பட்ட ரோப்கார் வசதியை, பக்தர்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைக்கிறார். 1,017 படிகள் கொண்ட அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில், மிக செங்குத்தாக இருக்கும் நிலையில் பக்தர்கள் பலரும், மலை ஏற சிரமப்பட்டு வந்தனர். இதனிடையே, 9 கோடி மதிப்பில் ரோப்கார் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், பணிகள் முடிவடைந்து நாளை பயன்பாட்டிற்கு வர உள்ளதாக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.