முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்காவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள பதிவில், சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப், இன்பிங்ஸ், அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில், சென்னை, கோவை, மதுரை மற்றும் செங்கல்பட்டில், 4 ஆயிரத்து 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.