மிரட்டி சென்ற `மிக்ஜாம்' புயல்.. "இதுவரை நடந்தது என்ன?".. தலைமை செயலாளர் சொன்ன தகவல்

Update: 2023-12-06 15:19 GMT

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என அறிவுறுத்தினார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில், மிக்ஜாம் புயல் காரணமாக 471 இடங்கள் நீரில் மூழ்கியதாகவும், அந்த பகுதிகளிலிருந்து 41 ஆயிரத்து 406 பேர் மீட்கப்பட்டு மூகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வெள்ளத்தில் சிக்கிய 19 ஆயிரத்து 86 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் 25 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பால், தண்ணீர் கேன் ஆகியவற்றை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்