மிக்ஜாம் புயல் காரணமாக, திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் ஈசா ஏரி நிரம்பி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட திருவள்ளூர் ஆட்சியர் பிரபு சங்கர், வெள்ள நீரை வெளியேற்றுவது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ள பாதிப்பில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் 99 சதவீதம் மீண்டுள்ளதாகவும், பாதிப்பு குறித்த அறிக்கை தயார் செய்து அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.