மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி தம்பதி சாமி தரிசனம் செய்தனர். நடிகர் ஆதியின் தந்தை ரவி ராஜாவுக்கு 76 வயது பூர்த்தி அடைந்ததை தொடர்ந்து, விஜய ரத சாந்தி நிகழ்வு கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வை நடத்தி இருவரும் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.