திடீர் ரெய்டில் செல்வப்பெருந்தகை கண்ட பல காட்சிகள் - கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய ஊழியர்கள்
திடீர் ரெய்டில் செல்வப்பெருந்தகை கண்ட பல அதிர்ச்சி காட்சிகள் - கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய ஊழியர்கள்
மயிலாடுதுறையில் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர்கள் விடுதியை முறையாக பராமரிக்காத ஊழியர்கள் 4 பேரை பணியிட மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு மதிப்பீட்டு குழுவினர் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் மயிலாடுதுறையில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை கல்லூரி மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கழிவறை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு ஜன்னல் கம்பி துருப்பிடித்து இருந்ததை கண்டு அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறிய நிலையில் சமையல் கூடத்தை பார்வையிட்ட அக்குழுவினர் பாத்திரங்கள் கழுவும் இடத்தில் மரவட்டைகள் உள்ளிட்டவை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.