ஆபாச வீடியோ என தமிழகத்தை பரபரப்பாக்கிய சம்பவம்... வாரணாசியில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தமிழக போலீஸ்

Update: 2024-06-11 12:18 GMT

மயிலாடுதுறை அருகேயுள்ள தருமபுர சைவ மடத்தின் மடாதிபதியை, அவர் குறித்தான ஆபாச வீடியோ இருப்பதாக கூறி கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. இது குறித்து 9 பேர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அனைவரும் தற்போது ஜாமினில் வெளியே இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில், தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளரான திருவையாறு செந்தில் என்பவரை, உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் வைத்து மயிலாடுதுறை போலீசார் கைது செய்திருக்கின்றனர். இந்த கைது நடவடிக்கைக்கு முன்பு, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் முன் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்திருந்ததும், மனுவை தலைமை குற்றவியல் நீதிபதி தள்ளுபடி செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்