நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு.. அமைச்சர் மா.சு சொன்ன அதி முக்கிய தகவல் | Ma. Subramanian

Update: 2024-07-15 13:39 GMT

தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்து 286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாத பாதிப்புகளை கண்டறிய பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பாதம் பாதுகாப்போம் திட்டம் மற்றும் நீரிழிவு நோய் பாத பாதிப்புகளை கண்டறிவதற்கான பயிற்றுனர் பயிலரங்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், செவிலியர்கள் மருத்துவர்கள் என 28 ஆயிரம் பேருக்கு பாதம் பாதுகாப்போம் திட்டம் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், 100 அரசு மருத்துவமனைகளில் பாத சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் மா.சுப்பிரமணியன் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்