அலங்காநல்லூர் டூ ஆஸ்திரேலியா..! சொந்த ஜெட்டில் பறக்கும் `ஏழை' குருஜி `தவமும்; தாம்பத்தியமும்' - LifeStyle-லில் ராஜ வாழ்வு பேச்சிலும்; செயலிலும் `குட்டி' நித்தி மகாவிஷ்ணுவின் - கர்மாவும்- ட்ராமாவும்..!

Update: 2024-09-07 08:13 GMT

அரசுப்பள்ளிகளில் புத்தாக்க உரையாற்றி சர்ச்சையில் சிக்கியுள்ள மகாவிஷ்ணு மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகின்றன... இதுபற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

இப்படியெல்லாம் தத்துவார்த்தமாக பேசிவிட்டு...குரு மகாவிஷ்ணு பைலட் மகா விஷ்ணுவாக மாறிய தருணம் என்று வீடியோ வெளியிட்டுள்ளதைப் பார்க்கையில் ஊருக்குத் தான் உபதேசம் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது...

ஸ்கைடைவிங்...விமான பயணம் என ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் மகா விஷ்ணு...

சித்தர்கள்...ஜீவசமாதி...என்று பேசிக் கொண்டிருக்கும் மகா விஷ்ணு...திடீரென திருமண வாழ்க்கை...லௌகீக வாழ்க்கை...பற்றியெல்லாம் பேசி...தவத்தையும் தாம்பத்திய வாழ்க்கையையும் கலந்தடிக்கிறார்...

இவ்வளவு சின்ன வயதில் இத்தனை முதிர்ந்த அனுபவமா என்று பார்த்தால்...தான் வாழ்க்கையில் செய்யாத சேட்டையெல்லாம் செய்த பிறகே தான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார் மகா விஷ்ணு...

ஒரு ஞானியைப் போல் எப்போதும் காட்டிக் கொள்ளும் மகா விஷ்ணு...எதையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத பள்ளிக் குழந்தைகளிடம் பேசுகையில் கவனமுடனும் கொஞ்சம் பொறுப்புடனும் பேசி இருக்க வேண்டும்...

அசோக் நகர் அரசுப் பள்ளியில் புத்தாக்க உரை நிகழ்த்தி அவர் சர்ச்சையில் சிக்கிய நிலையில், பேசும் முன்பு பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசியிடம் தான் மாணவர்கள் மத்தியில் என்ன உரையாற்ற வேண்டும் என்று கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது...

இவ்விவகாரம் தொடர்பாக திருப்பூர் குளத்து பாளையம் பகுதியில் அமைந்துள்ள பரம்பொருள் அறக்கட்டளை மையத்தில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்...

அத்துடன் மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது...

மேலும் சம்பந்தப்பட்ட 2 அரசுப்பள்ளி ஆசிரியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அசோக் நகர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதுடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது...

மகா விஷ்ணு உரையாற்றும் இடங்களிலெல்லாம் யோக பயிற்சிக்கு வருபவர்களாக இருந்தாலும் சரி மாணவர்களாக இருந்தாலும் சரி கண்களை மூடி கண்ணீர் விட்டுக் கதறுவதை நம்மால் பார்க்க முடிகிறது...

ஒருவேளை ரெய்கி சிகிச்சை போன்று ஏதேனும் வித்தியாசமான தொடு சிகிச்சை மூலம் அழ வைக்கிறாரா என்ற கேள்வியையும் இணையவாசிகள் எழுப்பியுள்ளனர்...

நித்யானந்தாவும் இதேபோல் செய்து தன் சீடர்களைக் கண்கலங்க வைப்பதைப் பார்த்திருப்போம்...

பயிற்சி வகுப்புகள் மூலமும், யூ டியூப் மூலமும் வருமானம் வருவதாகக் கூறும் மகா விஷ்ணு சொந்தமாக ப்ரைவேட் ஜெட் வைத்திருப்பதாகவும் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது...

பிறவி... புண்ணியம்... கர்மா... ஆன்மா...என்று ரைமிங்காக பேசிவிட்டு "நான் செய்த குறும்பு" என்ற இரட்டை அர்த்த வாக்கியத்தில் படம் ஒன்றை எழுதி இயக்கி தயாரித்து வெளியிடப்போவது தான் இதில் ஹைலைட்டான விஷயமே...

அலங்காநல்லூரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து..இப்போது பக்கத்துக்கு ஊருக்கு பஸ் பிடித்து செல்வதைப் போல் ஃப்ளைட்டில் ஆஸ்திரேலியா துபாய் என பறந்து கொண்டிருக்கும் மகா விஷ்ணுவின் அதிரடியான பொருளாதார வளர்ச்சி புரியாத புதிராகவே உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்