தமிழகத்தை அதிரவைத்த அறநிலையத்துறை அதிகாரிகள்.. பாலியல் புகார் பொய்?.. திடீர் திருப்பம்

Update: 2024-08-15 04:41 GMT

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் இணை ஆணையராக பணிபுரிந்து வந்தவர் செல்லத்துரை...

அண்மையில், மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறையின் துணை ஆணையராக இவர் நியமிக்கப்பட்டார்....

இந்நிலையில், மதுரை மண்டல அறநிலையத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களிடம், செல்லத்துரை பாலியல் ரீதியாக அத்துமீறி வருவதாக வாட்ஸ் அப் குழுக்களில் பரவிய செய்தியும், குற்றச்சாட்டுகளும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன....

அறநிலையத்துறையில் பணிபுரியும் 20க்கு மேற்பட்ட பெண்கள் பெயரில் புகார்

தொடர்ந்து, அறநிலையத்துறையில் பணிபுரியும் சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்களின் கையெழுத்தில்... மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது...

தட்டிக்கேட்கும் பெண்களை சஸ்பெண்ட் செய்துவிடுவேன் எனக்கூறி செல்லத்துரை மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், உயர் அதிகாரிகள் ரகசிய விசாரணை செய்தால் மேலும் சில பெண்கள் வெளியில் வந்து புகாரளிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது

இந்நிலையில்தான் வழக்கில் எதிர்பாரா திருப்பம் ஏற்பட்டிருக்கிறது...

பெண்களின் கையெழுத்தை போலியாக இட்டு, அவதூறு பரப்பிய முன்னாள் அதிகாரி

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தும், புகாருக்கு பதில் புகாரளித்தும் மதுரை, எஸ்.எஸ். காலனி காவல்நிலையத்தில் செல்லத்துரை புகாரளித்தார்...

தமக்கு கீழ் பணியாற்றும் பெண்களின் பெயரில் போலி கையெழுத்துகள் இட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலின் முன்னாள் செயல் அலுவர் ஜவஹர் பொய் புகார் அளித்திருப்பதாக குற்றம் சுமத்தி பரபரப்பை மேலும் கூட்டினார்...

ஓய்வு பெற இருந்தபோது, பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் ஆத்திரம்

வயது மூப்பால், கடந்த 31 ஆம் தேதி ஓய்வு பெற இருந்த ஜவஹர், தொடர் குற்றச்சாட்டுகளால் ஒழுங்கு நடவடிக்கை பெயரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது...

இதனால் ஆத்திரத்தில் இருந்த ஜவஹர், தன் மீதான வன்மத்தில் இவ்வாறு அவதூறு பரப்பி புகாரளித்திருப்பதாக செல்லத்துரை குறிப்பிட்டிருந்தார்....அறநிலையத்துறையின் முன்னாள் அதிகாரியை கைது செய்து சிறையிலடைத்த போலீசார்

இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், செல்லத்துரையின் குற்றச்சாட்டுகளை உறுதி செய்த நிலையில், ஜவஹர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்ததோடு, அவரை கைது செய்து சிறையிலும் அடைத்திருக்கின்றனர்.

இந்த சம்பவத்தில், ஜவஹரின் செயலுக்கு ஆதரவாக, அறநிலையத்துறையில் பணியாற்றும் சில பெண்கள் மதுரை காவல் ஆணையர் அலுவலகம் சென்று புகாரளித்தனர். அதிகாரிகளின் மோதலும், புகாரும், அது தொடர்பான நடவடிக்கைகளும் மதுரையை பரபரப்பின் உச்சத்தில் வைத்திருக்கிறது

Tags:    

மேலும் செய்திகள்