மதுரையில் சிறு போராட்டம் மக்கள் போராட்டமாக வெடித்தது.. அவசரமாக சமாதானத்துக்கு அழைக்கும் அமைச்சர்

Update: 2024-07-29 06:56 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில், உள்ளூர் வாகனங்கள் கட்டணம் செலுத்தும் விதிக்கு எதிராக மக்களின் போராட்டம் வெடித்துள்ளது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், திருமங்கலம் நகர் மற்றும் சுங்கச்சாவடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமங்களில், நாளை முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தையில், போராட்ட குழுவினர்கள் பங்கேற்க கோட்டாட்சியர் சாந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்