காரணமேயின்றி தாக்கிய போலீஸ்..3 துண்டான சிறுவனின் கால் - சவுக்கடி தீர்ப்பு கொடுத்த நீதிபதி

Update: 2024-06-18 05:08 GMT

காரணமேயின்றி தாக்கிய போலீஸ்..3 துண்டான சிறுவனின் கால் - சவுக்கடி தீர்ப்பு கொடுத்த நீதிபதி

16 வயது சிறுவனைக் காவலர்கள் தாக்கியதில் கால் எலும்பு 3 துண்டுகளாக முறிந்த நிலையில், நஷ்ட ஈடு கேட்டு அவரது தாய் தொடர்ந்த வழக்கில் இழப்பீடு வழங்குவது தான் நீதி என்று மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது... திருச்சியைச் சேர்ந்த விஜயா என்பவர் தொடர்ந்த வழக்கில் கடந்த 2016ல் தனது மகன் பிரசாந்திற்கு 16 வயதாக இருந்த போது டீக்கடையில் தன் மகன் டீ குடித்துக் கொண்டிருந்த சமயத்தில் எந்தக் காரணமும் இல்லாமல் பொன்மலை காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ஒருவர் பிரசாந்தை லத்தியால் தாக்கியதில் தன் மகனுக்கு கால் எலும்பு 3 துண்டுகளாக உடைந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் மகனுக்கு சிகிச்சைக்காக பல லட்ச ரூபாய் செலவான நிலையில் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் மகனுக்கு இழப்பீடு வழங்குவது தான் நீதி என்று தெரிவித்த நீதிபதி 3 லட்ச ரூபாயை இழப்பீடாக மனுதாரர் தரப்புக்கு 2 மாதங்களில் வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்