சப்பாத்தி கட்டையால் கணவரை பதம் பார்த்த மனைவி - மதுரையில் கொடூரம்!

Update: 2024-07-15 02:20 GMT

மதுபோதையில் தினமும் சித்ரவதை செய்து வந்த கணவரை, மனைவி சப்பாத்தி கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை, மேல அனுப்பானடி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு கனிமொழி என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை கார்த்திக் அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கனிமொழி, சப்பாத்தி கட்டையாலும், தோசை கல்லாலும் கணவரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்