மதுரை மாவட்டம் மேலூரில் 400 ஆண்டுகள் பழமையான திரெளபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையாக பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில், பூக்குழியில் இறங்கிய பக்தர்கள் ஒருசிலர் பூக்குழிக்குள் விழுந்தனர். உடனே அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் பூக்குழிக்குள் இறங்கி பக்தர்களை மீட்டனர்.