பார்ட்னர் போட்டு குடித்த மது பிரியர்கள்.. வார்த்தையை விட்ட கொத்தனார். கோவத்தில் போட்டு தள்ளிய நண்பர்

Update: 2024-05-29 16:53 GMT

மதுரை பழைய மீனாட்சி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. கொத்தனரான இவர், கடந்த 4 நாட்களுக்கு முன் தலையில் பலத்த காயத்துடன் வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கிலிமுத்து என்பவரை கைது செய்தனர். விசாரணையில், இருவரும் ஒன்றாக மது அருந்தும் போது, சங்கிலி முத்துவின் தாய் குறித்து மாரிமுத்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில், மாரிமுத்துவை கொன்றதாக சங்கிலி கருப்பன் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், அவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்