ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் தேரோட்டம் - கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2024-10-12 10:38 GMT
  • தமிழகத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முக்கியமான கோவில்களில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
  • கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில், தேரோட்டம் நடைபெற்றது. கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் பக்தர்கள் இழுத்து சென்ற தேர், நான்கு மட வீதிகள் வழியாக வலம் வந்து நிலை வந்தடைந்தது.
  • தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலநாதர் ஆலயத்தில் ஐப்பசி விசு திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
  • விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வடபெருங்கோவிலுடையான் பிரம்மோற்சவத்தை ஒட்டி செப்பு தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீ பூதேவி, ஸ்ரீதேவி ஸமேத ஸ்ரீ வடபெருங்கோவிலுடையான் தேரில் நகர் வலம் வந்தார்.
  • மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. வருகிற 14ஆம் தேதி தெப்ப உற்வம் நடைபெற உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்